அம்மா பெயர் எதுக்கு … தியாகத் தலைவி பெயரை வைத்துக் கொள்ளுங்கள் – ஜெயக்குமார் கேள்வி !

Webdunia
சனி, 26 அக்டோபர் 2019 (08:29 IST)
அமமுக என்ற கட்சியைப் பதிவு செய்ய அதிமுக தடுப்பது ஏன் என்பது குறித்து ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எனும் கட்சியைத் தொடங்கிய சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அந்த பெயரில் கட்சியைப் பதிவு செய்வதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமர் இது தொடர்பானக் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது ‘அமமுக என்பது ஒரு கட்சியேக் கிடையாது. ஜெயலலிதாவின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்த அவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. அம்மா என்பது ஜெயலலிதாவைதான் குறிக்கிறது. அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். வேண்டுமானால் தியாகத்தலைவி என சொல்லப்படும் சசிகலாவின் பெயரில் கட்சி ஆரம்பித்துக்கொள்ளட்டும்’ என அறிவுரை வழங்குவது போல கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்