ஜல்லிக்கட்டு இந்த வருடம் கட்டாயம், அடுத்த வருடம்?

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (14:42 IST)
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் ஆரம்பம் முதல் தீவிரமாக போராடி வரும் காங்கேயம் காளை ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் கார்த்திகேய சிவசேனாதிபதி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
டெல்லியில் செய்தியாளர்களை சந்திந்த கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியதாவது:-
 
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும். ஆனால், அடுத்த ஆண்டு உறுதியாக சொல்ல முடியாது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நிரந்தர தீர்வு. 
 
ஜல்லிக்கட்டு தடை காரணமாக இந்தியாவில் 13 காளை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. நாட்டு காளை இனங்களை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு அப்போதைய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மூலம் தடை விதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்