சசிக்கலா தண்டிக்கப்பட்டதால் அபராதத்தை விட முடியாது! – வருமான வரித்துறை கறார்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:38 IST)
சசிக்கலா மீது வருமான வரித்துறை விதித்த அபராதத்தை நீக்க கோரிய வழக்கில் வருமான வரித்துறை பதிலளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா சமீபத்தில் விடுதலையான நிலையில் வருமானவரி கட்டாததற்கான அபராத வழக்கு தொடரப்பட்டிருந்தது. 1994-95 ம் ஆண்டுக்கான வருமானவரியாக ரூ.48 லட்சம் கட்ட சொல்லி 2002ல் வருமான வரித்துறை தெரிவித்திருந்துள்ளது.

இந்நிலையில் 1 கோடிக்கும் குறைவான வரிக்கணக்கானதால் வருமானவரித்துறையின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சசிக்கலா தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் விளக்கமளித்துள்ள வருமானவரித்துறை, சசிக்கலா தண்டிக்கப்பட்டதால் அபராதத்தை கைவிட முடியாது என கறாராக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்