சூரரைப் போற்று திரையரங்குகளில் ரிலீஸ்! சூர்யா கொடுத்த ஆஃபர்!

வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:18 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார்.ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.

இதனால் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஆர்வமாக இருந்தனர். இந்தியில் நடிகர் ஷாகித் கபூர் இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க விருப்பப்பட்டார். இப்போது இந்த படத்தை இந்தி ரீமேக்கை சூர்யாவே தனது  2டி எண்டர்டெயின்மெண்ட் மூலமாக தயாரிக்க உள்ளாராம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது திரையரங்குகள் திறந்துள்ள நிலையில் புதிய படங்கள் ரிலீஸாக தயக்கம் காட்டியுள்ள நிலையில் பழைய வெற்றி பெற்ற படங்கள் ரிலீஸாவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் சூரரைப் போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இந்த படத்தின் மூலம் வரும் வருவாயை திரையரங்க உரிமையாளர்களும், அவர்களின் சங்கமுமே பிரித்து எடுத்துக் கொள்ளலாம் என தயாரிப்பாளரான சூர்யா அறிவித்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்