விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரி சோதனை? - திரையுலகில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (16:40 IST)
நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமனா வரித்துறையினர் சோதனை நடத்தியதாக வெளியான தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இயல்பான நடிகர் என பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்படார் பாலகுமாரா, நானும் ரவுடிதான், விக்ரம் வேதா போன்ற படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. நேற்றி வெளியான செக்கச் சிவந்த வானம் படத்திலும் அவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
கடந்த 3 நாட்களுக்கு முன் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானது. ஆனால், சோதனை நடைபெறவில்லை. வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பாக விஜய் சேதுபதி தரப்பில் இருந்து சில ஆவணங்களை பெறவே, அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு வந்து சென்றதாக விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வருமான வரிசோதனை நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்