அமமுகவின் அடுத்த விக்கெட்: இசக்கி சுப்பையா செய்தியாளர் சந்திப்பு

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (21:27 IST)
தினகரனின் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத், பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன் , தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய முக்கிய தலைவர்கள் விலகியதில் இருந்து அந்த கட்சியில் உள்ள மற்ற தலைவர்களும் எந்த நேரத்திலும் கட்சியை விட்டு செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கிய இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தலுக்கு பின்னர்  தினகரனுக்கும் இசக்கி சுப்பையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் இதனையடுத்து தனது அடுத்த கட்ட அரசியல் நிலை குறித்து நாளை காலை 10 மணிக்கு தென்காசியில் செய்தியாளர்கள் முன் அறிவிக்கவிருப்பதாகவும்  அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
எனவே அமமுகவில் இருந்து இன்னொரு விக்கெட் விழுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இசக்கி சுப்பையா அதிமுகவுக்கு செல்கிறாரா? அல்லது திமுக செல்கிறாரா? என்பது நாளை காலை தெரியவரும். மேலும் தற்போது சென்னை அசோக் நகரில் உள்ள அமமுகவின் கட்சி அலுவலகம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்