அதிகாரக்குவிப்பில் ஈடுபடுவதும் கூட்டாட்சி தத்துவமா பிரதமரே? சீமான் கேள்வி

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:14 IST)
ஒரே நாடு ஒரே முறைமை எனும் ஒற்றை மயமாக்கலை முன்னெடுத்து பன்முகத்தன்மையை குலைத்து, அதிகாரக் குவிப்பில் ஈடுபடுவது கூட்டாட்சி தத்துவமா என நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

கூட்டாட்சி தத்துவத்துக்கான சிறந்த சான்றாக கொரொனாவுக்கு எதிரான போர் அமைந்துள்ளது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி! 'ஒரே நாடு – ஒரே முறைமை' எனும் ஒற்றைமயமாக்கலை முன்னெடுத்து, பன்முகத்தன்மையைக் குலைத்து, அதிகாரக்குவிப்பில் ஈடுபடுவதும் கூட கூட்டாட்சி தத்துவமா பிரதமரே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்