இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய-சீன விவகாரம் குறித்து முதல்முறையாக தொலைபேசியில் பேசி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்பந்தத்தை மீறி சீனா நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்