திட்டமிட்டபடி சென்னையில் ஐபிஎல் போட்டி உறுதி: ராஜீவ் சுக்லா

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (14:35 IST)
சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் அதை தடுக்க முயற்சி செய்வோம் என்றும், வீரர்களை கடத்துவோம் என்றும் ஒருசில அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இருப்பினும் திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகள் ஐபிஎல் போட்டியை எதிர்க்கவில்லை. மாறாக போட்டியை காண செல்லும் இளைஞர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மைதானத்தில் காவிரி குறித்த பதாகைகளை கொண்டு செல்லுங்கள் என்று கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஒருசில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக சென்னையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இந்த போட்டியை திருவனந்தபுரத்திற்கு மாற்றவுள்ளதாகவும், ஒரு செய்தி வெளியானது
 
ஆனால் சென்னையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா சற்றுமுன் தெரிவித்தார். போட்டி சுமூகமான முறையில் நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும், அரசியல் சர்ச்சைக்குள் ஐபிஎல் போட்டியை இழுக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் இன்று சென்னையில் உள்ள ஓட்டல்களில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்