சாகித்ய அகாடமி விருது வேண்டாம்: இன்குலாப் மகள் அதிரடி

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (01:55 IST)
ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில் சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு எழுத்தாளர்களின் கனவாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று மாலை மக்கள் கவிஞர் இன்குலாப் மற்றும் யூமா வாசுகி ஆகியோர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது

`காந்தாள் நாட்கள்’ கவிதைத் தொகுப்புக்காக இன்குலாப் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருதும், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி எழுத்தாளர் யூமா வாசுகிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்குலாப் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுத்து அவரது மகள் ஆமீனா, சாகித்ய அகாடமி குழுவுக்கு இமெயில் அனுப்பியுள்ளாராம்.

இதுகுறித்து ஆமினா கூறியபோது, '‘அரசு அளிக்கும் விருதுகளை ஏற்காத அப்பாவின் பாரம்பர்யத்தைக் காக்கவே, சாகித்ய அகாடமி விருது வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக சாகித்ய அகாடமி அமைப்பின் இயக்குநருக்கு நான் இ-மெயில் அனுப்பிவிட்டேன். அதுகுறித்த அதிகாரபூர்வ பதிலுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்