இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை என்று கூறினால் அது மிகையாகாது. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் மட்டுமின்றி ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். இவர் எழுதிய நாடகத்தின் முடிவு, வாழ்விலே ஒருமுறை, விமோசனம் விடுதலை, காலமும் ஐந்து குழந்தைகளும், முறைப்பெண், சினேகிதர் மற்றும் மானசரோவர் உள்பட பல நாவகள் புகழ்பெற்றவை. அசோகமித்ரன் எழுதிய 'அப்பாவின் சிநேகிதர்' என்னும் சிறுகதை தொகுப்புக்கு 1996 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.