நீதிபதி முன் குற்றவாளியை சரமாரியாக தாக்கிய பெண்கள்: கடலூரில் பரபரப்பு

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (07:08 IST)
சமீபத்தில் சென்னையில் குடும்பநல நீதிமன்ற நீதிபதி முன் மனைவியை கணவர் கத்தியால் குத்திய பரபரப்பான சம்பவம் குறித்த செய்தியை பார்த்தோம். அதேபோல் நேற்று கடலூரில் நீதிபதி முன் குற்றவாளியை சில பெண்கள் இணைந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 
கடந்த 2014ஆம் ஆண்டு பாபு என்பவர் 14 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்தார். இதனையடுத்து குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் மீது பாபு கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது
 
இந்த வழக்கு நேற்று கடலூர் நீதிமன்ற நீதிபதி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்த பாபுவை அவர் திருமணம் செய்த சிறுமியும் அவருடைய சகோதரியும் தாயாரும் சரமாரியாக நீதிபதி முன்னிலையிலேயே தாக்கினர். இதுகுறித்து பாபு அளித்த புகாரின் அடிப்படையில் பாபுவை தாக்கிய சிறுமியர்களும் அவர்களுடைய தாயாரும் கைது செய்யப்பட்டனர். நீதிபதி முன்னிலையில் குற்றவாளியை பெண்கள் தாக்கிய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்