ராணுவ வீரர்களின் சொத்துக்களுக்கு வரி இல்லை: துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு..!

Mahendran

திங்கள், 12 மே 2025 (16:32 IST)
ராணுவ வீரர்களின் சொத்துக்களுக்கு வரி இல்லை என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. 
 
தாய்நாட்டை காப்பதற்காக எல்லையில் வீரமாக போரிடும் ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஆந்திராவின் ஊரகப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு சொந்தமான சொத்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
 
இது குறித்து துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்கள் கூறியபோது, துணிச்சலான நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஊரகப்பகுதியில் இந்திய ராணுவர்களுக்கு சொந்தமான வீடுகளுக்கு மற்றும் சொத்துகளுக்கு வரி விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நமது பாதுகாப்பு படை, ராணுவம், கடற்படை, விமானப்படை, துணை ராணுவம், CRPF உள்ளிட்டவற்றில் பணிபுரியும் வீரர்களுக்கு ஆந்திர அரசு கௌரவிக்கிறது என்றும் அவர்கள் அனைவருக்கும் சொத்துவரி விலக்கு என்றும், ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மட்டும் கிடைத்து வந்த இந்த சலுகை தற்போது அனைத்து விதமான ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
 
Editd by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்