பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தனை விடுவிக்காவிட்டால் போரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா மற்றும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அபிநந்தனை விடுதலை செய்தார். ஆனால் பாகிஸ்தானியர்களும், இந்தியாவில் உள்ள சில அரைவேக்காடு நபர்களும் இம்ரான்கானுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, 'இந்தியா, பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்ட போது, இம்ரான்கானின் பேச்சு சமநிலையாக இருந்ததாகவும், மிகவும் தெளிந்தவராக போர் ஒரு தீர்வாக இருக்காது என்று தீர்க்கமாக கூறியதாகவும், இதனால் அவர் நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியானவர் என்றும் தெரிவித்தார்.