தொண்ணூறுகளில் தனியார் தொலைக்காட்சி பெருக பெருக மக்களின் கவனம் முழுக்க சீரியல் பக்கம் பெண்களின் பொழுதுபொக்காகவே மாறியது. அது சமீபகாலம் வரை தொடர்ந்தது. இந்நிலையில் ஊடகங்களின் தாக்கத்தால் போட்டி போட்டுக்கொண்டு மிக வேகமாக செய்திகளை வெளியிடுவதால் மக்களின் சீரியல் மோகம் குறைந்திருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரையில் வசிக்கும் முகமது ரஸ்மி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தா. அதில் வாடிக்கையாளர்கள் பணம் கட்டிப் பார்க்கும் விரும்பிய சேனல்களில் பல விளம்பரங்கள் ஒளிபரப்புகின்றனர். இது வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக உள்ளதோடு டிராய் விதிமுறைக்கு எதிராகவும் உள்ளது. என்று தெரிவித்திருந்தார்.
இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் இந்தியாவில் மொத்தம் 874 சேனல்கள் உள்ளன, இதில் 125 சேனல்கள் விதிகளை மீறியுள்ளதாக டிராயே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த சேனல்கள் மீது விதிகளை மீறியதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.