தென்மேற்கு பருவமழையை விட 6 சதவீதம் அதிக மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (13:18 IST)
தென்மேற்கு பருவமழையை விட ஆறு சதவீதம் அதிக மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது என்றும் திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூர் என்ற பகுதியில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ]
 
மேலும் இந்த மழை தென்மேற்கு பருவமழை இயல்பை விட ஆறு சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் என்றும் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளதை அடுத்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்