நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை.. என்னென்ன நடக்கும்?

Mahendran

செவ்வாய், 6 மே 2025 (12:57 IST)
இந்திய எல்லை மாநிலங்களில் மே 7ஆம் தேதி  பெரிய அளவிலான பாதுகாப்பு போர் ஒத்திகை நடத்தப்படவுள்ளது. கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது, நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய மாநிலங்களில் எந்தவொரு திடீர் தாக்குதலுக்கும் தயாராக இருக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. 54 ஆண்டுகளுக்குப் பிறகு, 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் நிகழ்ந்த பின்னர் மீண்டும் இப்படி ஒரு பெரிய அளவிலான ஒத்திகை நடத்தப்படுகின்றது.
 
பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் முக்கிய இடங்களான கல்பாக்கம் அணுமின் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தொழிற்சாலை, மணலி எண்ணெய் தொழிற்சாலை ஆகியவற்றிலும் ஒத்திகை நடக்க உள்ளது.
 
அபாய சைரன் ஒலிக்கும், விமானங்கள் வட்டமிடும், சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் திட்டமும் செயல்படுத்தப்படும். மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். எல்லையோர மக்களுக்கு முந்தைய நாள் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
 
மக்கள் கவலைப்பட வேண்டாம்,  இது ஒரு ஒத்திகை மட்டுமே. போலிச் செய்திகள் பரப்ப வேண்டாம் என்றும், அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்