ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திடீரென பாகிஸ்தான் தனது சொந்த குடிமக்களை திரும்ப பெற மறுத்துவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வாகா எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இந்தியாவில் இருந்து வரும் பாகிஸ்தான் குடிமக்களை அனுமதிக்காமல், எல்லையில் உள்ள வாசலை பாகிஸ்தான் மூடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இந்தியாவுக்கும் செல்ல முடியாமல், பாகிஸ்தானுக்கும் செல்ல முடியாமல், எல்லையில் பலர் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர். பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், எல்லை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.