இந்தியாவில் பல ஆண்டுகளாக போலி விசா உதவியுடன் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவரை நாடுகடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, எல்லை அருகே அவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பகள்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வரும் பாகிஸ்தானியரை கண்டறிந்து, நாடு கடத்த மத்திய அரசு மாநிலங்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களின் உளவுத்துறை மற்றும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதேநேரம், ஜம்முவில் வசித்து வந்த அப்துல் பாசித் எனும் 69 வயதுடைய நபர், தன் விசா காலாவதியான பின்னரும் நாடு திரும்பாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் அவருடைய குடும்பத்தினரிடையே மட்டுமல்லாது, எல்லைப் பகுதியில் செயல்பட்டிருந்த அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இது பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது.