பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது- சு, வெங்கடேசன்

Sinoj
சனி, 10 பிப்ரவரி 2024 (21:40 IST)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சமீபத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், சமீபத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டது.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் எம்பி சு, வெங்கடேசன் தெரிவித்துள்ளதாவது:

இந்த வெள்ளை அறிக்கை என்ன சொல்கிறது? பில்லியனர்களுடைய வளர்ச்சியைப் பற்றி இங்கே நான் சொல்ல வேண்டும், 2014வது ஆண்டில் இந்தியாவில் 70 பில்லியனர்கள் இருந்தார்கள், இன்றைக்கு 170 பில்லியனர்கள் இருக்கிறார்கள். தனிநபர் சராசரி வருமானம் உலகத்தில் 142 வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

மனித வள குறியீட்டில் 132 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மகிழ்ச்சிக் குறியீட்டில் 136-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கார்ப்பரேட்டுகள் மகிழ்ச்சியில் திளைக்கிற ஒரு நாட்டில் மக்களின் மகிழ்ச்சி கடலினுள் தான் மூச்சு மூழ்க உள்ளே கிடக்கும். எனவேதான் இந்தியா உலகின் மகிழ்ச்சிக் குறியீட்டில் 136 வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச உணவுக்கொள்கைக் கழகத்தினுடைய பட்டினிக் குறியீட்டில் 122 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது.

இந்தப் புள்ளி விவரத்தை எல்லாம் எதிர்க்கட்சிகள் சொன்னால் இந்தப் புள்ளி விவரத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று அமைச்சர் சொல்கிறார்.நீங்களே பரிட்சை எழுதிக் கொள்வீர்கள், நீங்களே மதிப்பிட்டுக் கொள்வீர்கள், நீங்களே அதற்கு மதிப்பெண் இட்டுக் கொள்வீர்கள் கேட்டால் மதிப்பெண் விஷயத்தில் தவறு இழைத்தால் பத்தாண்டு கால சிறைத்தண்டனை என்று புதிய சட்டத்தைக் கொண்டு வருகிறீர்கள்..என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்