அதிகரிக்கும் சுற்றுலா பயணம்! சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே! - முழு விவரம்

Prasanth Karthick

திங்கள், 28 ஏப்ரல் 2025 (09:29 IST)

கோடை விடுமுறையால் மக்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளதால் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கோடைக்கால விடுமுறையையொட்டி மக்கள் பலரும் குடும்பத்தோடு சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளதால் பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. வட தமிழக பகுதிகளில் இருந்து மக்கள் பலரும் தென்  மாவட்டங்களுக்கு பயணிப்பது அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வ்பே அறிவித்துள்ளது.

 

அதன்படி, ஏப்ரல் 30ம் தேதி பெங்களூரில் மாலை 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06521) கிருஷ்ணராஜபுரம், சேலம், நாமக்கல், கரூர் திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக மதுரையில் புறப்படும் சிறப்பு ரயில் (06522) மே 1ம் தேதி காலை 9.10க்கு புறப்பட்டு இரவு 7.50க்கு பெங்களூர் சென்றடையும்.

 

தாம்பரம் - திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் ரயில் திருச்சிக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்