ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்.. சென்னையில் இன்று 2ஆம் கட்ட சோதனை..!

Siva

திங்கள், 28 ஏப்ரல் 2025 (09:03 IST)
சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட சோதனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
பூந்தமல்லி முதல் போரூர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கடந்த மாதம் 20ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது என்றும், இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தால் விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
 
தற்போது ’கலங்கரை விளக்கம்’ முதல் ’பூந்தமல்லி’ வரை மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பொறியியல் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், இன்றைய இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தபின், அடுத்த கட்ட சோதனை அடுத்த மாதம் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்