ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரி துறை சோதனை நிறைவு.. கோடியில் ரொக்கம், கிலோவில் தங்கம் பறிமுதல்..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (10:29 IST)
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் இந்த சோதனையில் 4.5 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினரின் நடைபெற்றது இந்த சோதனையில் 2.7 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த சோதனையில் 4.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை முக்கிய மருத்துவ கல்லூரியின் பிணவறையில் மூட்டை மூட்டையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சோதனை நடந்த நிலையில் அனைத்து இடங்களிலும் தற்போது சோதனை முடிந்துள்ளது. மேலும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட முழு தகவல்களை விரைவில் வருமான வரித்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்