வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அவருக்குச் சொந்தமான ஓட்டல், பல் மருத்துவமனை, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 50க்கும் அதிகமான இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மி அமைச்சர் சஞ்சய் சிங் கைது, ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை ஆகியவை பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.