எஸ்கேப் ஆன ரஜினி, சிக்கிய விஜய்: வருமான வரித்துறையின் கறார் ஆட்டம்!!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (09:19 IST)
Rajnikanth and Vijay

வருமான வரித்துறையினரின் பிடியில் இருந்து ரஜினிகாந்த் எஸ்கேப் ஆகி தற்போது நடிகர் விஜய் சிக்கியுள்ளார். 
 
பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலியில் நடந்துக்கொண்டிருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜய்யிடம் சம்மன் வழங்கி அவரை அங்கிருந்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். 
 
ஒரே இரவில் விஜய்யின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பனையூர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. இன்னமும் நீடிக்கும் இந்த விசாரணையில் விஜய்யின் வங்கி கணக்குகள், அவரின் சம்பளம் குறித்த விவரங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
இருப்பினும் இப்போது வரை இந்த சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் #WeStandWithVIJAY என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னரே நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் வருமான வரியை முறையாகச் செலுத்தவில்லை என கூறி, 2002 மற்றம் 2005 வரையிலான மூன்று நிதியாண்டுகளுக்கு சேர்த்து ரூ.66,22,436 அபராதம் விதித்து வருமானவரித் துறை வழக்கில் இருந்து ரஜினி வெளியே வந்தார். 
ஆம், வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜினிகாந்த்துக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக கூறியதால் இந்த வழக்கு ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. ஆனால், இப்போது வருமான வரித்துறையினரின் பிடியில் விஜய் சிக்கியுள்ளார். 
 
ரஜினி, விஜய் என தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளிகளை வருமான வரித்துறை அடுத்தடுத்து குறிவைத்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்