குடித்து விட்டு ரகளை செய்த போலீஸ்: தர்ம அடி கொடுத்த மக்கள்!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (09:18 IST)
திண்டுக்கலில் மது அருந்தி விட்டு ரகளை செய்த போலீஸுக்கு மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் பணி புரிபவர் பாண்டியராஜன். காமாட்சிபுரம் பகுதியிலிருந்து மது அருந்தி விட்டு வாகனத்தில் வேகமாக வந்த பாண்டியராஜன் தவறான திசையில் வண்டியை ஓட்டி மற்றொரு பைக்கில் மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு சுற்றியிருந்த பொதுமக்கள் பாண்டியராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மது அருந்தியிருந்த பாண்டியராஜன் மக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பாண்டியராஜனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த சக போலீஸார் பாண்டியராஜனை மீட்டு சென்றுள்ளனர். காவலரே குடித்துவிட்டு ரகளை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்