ஏஜிஎஸ் நிறுவனத்தில் ரெய்டு: ரூ.24 கோடி பறிமுதல் என தகவல்!

புதன், 5 பிப்ரவரி 2020 (20:05 IST)
ஏஜிஎஸ் நிறுவனத்தில் ரெய்டு: ரூ.24 கோடி பறிமுதல் ?
தளபதி விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர்களின் வீடுகளில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே
 
இதனை அடுத்து பிகில் படத்தின் நாயகன் விஜய் வீடுகளிலும் சோதனை நடந்து வந்தது என்பதும் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அழைத்து வந்து சுமார் 5 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூபாய் 24 கோடி முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவல் உண்மையா என்பது குறித்து வருமான வரித் துறையினர் அதிகார பூர்வமாக தகவல் வெளியிட்டால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்