பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (15:56 IST)
சென்னை ஈ சி ஆர் சாலையில் காரில் சென்ற இளம் பெண்களை விரட்டி, மிரட்டல் விடுத்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் யாருக்கும் அரசியல் தொடர்பில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 25ஆம் தேதி நள்ளிரவில் இளம் பெண்கள் சிலர் மாமல்லபுரம் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் திடீரென இரண்டு கார்களில் வந்தவர்கள் அவர்களை வழிமறித்தனர். காரில் வந்த   நபர்கள் பெண்களை மிரட்டியதாகவும் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் மாணவர்கள் தான் என்றும் சுங்க கட்டணத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே கட்சி கொடியை பயன்படுத்தி உள்ளார்கள் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சம்பவம் நடந்த முட்டுக்காடு பகுதியில் மேலும் சில சிசிடிவி கேமராக்களை பொருத்தி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்