தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்மையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த செந்தில்பாலாஜி, சேலம் ராஜேந்திரன், கோவி.செழியன், ஆவடி நாசர் ஆகியோரை அமைச்சர்களாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டார்.
அதே நேரத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் செந்தில்பாலாஜி, சேலம் ராஜேந்திரன், கோவி.செழியன், ஆவடி நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.