இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரினி அமரசூரிய பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் அனுர குமார திசநாயக்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். இவர் அந்நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற உடனேயே அந்நாட்டின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரினி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக இவர் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அதிபர் அனுர குமார திசநாயக்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கையின் 16வது பிரதமரான அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில்துறை, சுகாதாரம், முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.