எடுடா வண்டியை! போடுடா விசிலை: தமிழில் டுவீட் போட்ட மற்றுமொரு சிஎஸ்கே வீரர்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (13:39 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தமிழ் மொழி தெரியாவிட்டாலும் அவ்வப்போது தமிழில் டுவீட் செய்து தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அசத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர் ஏற்கனவே தமிழில் டுவீட் செய்து அசத்தியிருந்த நிலையில் சற்றுமுன் மீண்டும் தமிழில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.
 
இன்றிரவு சென்னை மக்களின் ஆதரவுடன் சொந்த மண்ணில் முதல்முதலாக களமிறங்கவுள்ளோம். இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியது. எடுடா வண்டியை போடுடா விசிலை என்று டுவீட் செய்துள்ளார். 
 
ஆனால் காவிரி பிரச்சனையால் மைதானத்தில் ஏற்பட்டுள்ள கெடுபிடி மற்றும் பாம்பு ஆகிய விவகாரங்களால் சென்னை ரசிகர்கள் இம்ரான் தாஹிர் டுவீட்டை ரசிக்கும் நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்