டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியது. அந்த அணியின் சாம்சன் மட்டுமே 49 ரன்கள் அடிக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய சன் ரைசர்ஸ் அணி, 15.5 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 77 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.