யாரையும் குறை சொல்லல.. தனித்து போட்டியிடுகிறோம்! – ஐஜேகே அதிரடி முடிவு!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (13:53 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்திய ஜனநாயகக் கட்சி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அதன் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார். ”மக்களின் செல்வாக்குடன் போட்டியிடுகிறோம், பல்வேறு துறைகளில் மக்களுக்கு தேவையானதை செய்கிறோம். யாரையும் குறை சொல்லி அரசியல் செய்யும் கட்சி ஐஜேகே இல்லை” ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்