சோளப்பயிரை மேய்ந்த 78 ஆடுகள் பலி! – கமுதியில் அதிர்ச்சி சம்பவம்!

சனி, 29 ஜனவரி 2022 (11:43 IST)
கமுதி அருகே அறுவடை செய்யப்பட்ட சோளப்பயிரை தின்ற ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமுதி அருகே வண்ணாங்குளம் என்ற இடத்தில் விளைவித்த சோளப்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் அப்பக்கமாக மேய்ச்சலுக்கு சென்ற 130க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் சோளப்பயிர்களை மேய்ந்துள்ளன. இதில் சுமார் 78 செம்மறியாடுகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகாரில் நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொத்தாக பல ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்