கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Prasanth Karthick

சனி, 24 மே 2025 (16:19 IST)

டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

 

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைகள்:

 

கடந்த 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படக்கூடிய வரி வருவாய் பங்கு 41 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் இதுவரை 33.16 சதவீதம் மட்டும் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களால் மாநில அரசுகளுக்கு அதிக நிதி சுமை ஏற்படுகிறது. எனவே ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.

 

அதுபோல பிஎம்ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாததால் எஸ்.எஸ்.ஏ நிதி மறுக்கப்படுகிறது. 2024-25ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டிற்கு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதை பாரபட்சமின்றி விடுவிக்க வேண்டும்

 

காவ்ரி, வைகை, தாமிரபரணி உள்பட நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்து மீட்டெடுக்க புதிய திட்டம் தேவை. இந்த திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மொழி மாநிலங்கள் தங்களது மொழிக்கு அதை மொழி பெயர்த்துக் கொள்வார்கள்

 

நாட்டில் உள்ள முக்கிய நகர்புறங்களின் மேம்பாட்டிற்கு பெரும் நிதியைக் கொண்ட திட்டம் அவசியம், சிறந்த உட்கட்டமைப்பு, இயக்க மற்றும் சுகாதாரத்தை மையமாக கொண்டு நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசரத்தேவை உள்ளது”

 

இவ்வாறு முதல்வர் மு.க,ஸ்டாலின் கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்