வாட்ஸப் இல்லைன்னா.. அரட்டை யூஸ் பண்ணுங்க! இதுக்கெல்லாம் வழக்கா? - உச்சநீதிமன்றம் அதிரடி!

Prasanth K

புதன், 15 அக்டோபர் 2025 (09:08 IST)

தனது வாட்ஸப் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த அறிவுரை வைரலாகியுள்ளது.

 

உலகம் முழுவதும் மெசேஜ், படங்கள், வீடியோக்கள் அனுப்புவது தொடங்கி பல்வேறு தொடர்பு சேவைகளுக்கு மக்கள் வாட்ஸப்பை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் மெட்டா நிறுவன செயலியான வாட்ஸப் பல இந்திய மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் சமூக வலைதள கணக்குகள் மற்றும் வாட்ஸப் கணக்குகளில் போலியானவை, மோசடி தொடர்பானவற்றை அந்தந்த நிறுவனங்களே ப்ளாக் செய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் விதிகள் கூறுகின்றன.

 

அவ்வாறாக ப்ளாக் செய்யப்பட்ட வாட்ஸப் கணக்குகளில் பெண் மருத்துவர் ஒருவரின் வாட்ஸப்பும் ப்ளாக் ஆகியுள்ளது. இது தொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்து, இது அடிப்படை உரிமை மீறல் என்றும், தனது வாட்ஸப் கணக்கு மீதான தடையை நீக்க வேண்டுமென்றும் முறையிட்டார்.

 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வாட்ஸப் பயன்பாடு என்பது அடிப்படை உரிமை கிடையாது. வாட்ஸப்பிற்கு பதிலாக வேண்டுமானால் உள்நாட்டு தயாரிப்பான ஸோகோவின் அரட்டை செயலியை பயன்படுத்துங்கள் என கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் உள்நாட்டு ஸோகோ தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் மெயில் முகவரிகளை ஸோகோ மெயிலுக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்