ஒரு பெரிய கட்சி என்.டி.ஏ கூட்டணிக்கு வருகிறது.. விஜய்யை மறைமுகமாக சொன்னாரா வானதி சீனிவாசன்?

Siva

புதன், 15 அக்டோபர் 2025 (08:26 IST)
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வலுவான தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்கள் என்று தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சூசகமாக கூறியுள்ளார். இந்த கருத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் NDA கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"பலமான நபர்கள் இணையப் போகிறார்கள், அந்த நபர் யார் என்பதை நீங்களே கருதலாம்," என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் இவ்வாறு பேசியதற்ச் சில நாட்களுக்கு முன், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் விஜய்யின் கட்சி கொடிகளை அசைந்ததையும் இதுகுறித்து  அவர் இது 'பிள்ளையார் சுழி' போடப்பட்டுவிட்டது என்றும் 'புரட்சிக்குரிய சத்தம்' என்றும் வர்ணித்தையும் புரிந்து கொள்ளலாம்.
 
எனினும், தமிழக வெற்றி கழகம் தரப்பில், என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து எவ்வித தகவலையும் மறுத்து, கொடி அசைத்தவர்கள் அ.தி.மு.க. ஆதரவாளர்களே என்று விளக்கமளித்துள்ளது. இந்த யூகங்கள் தமிழக அரசியலில் கூட்டணியை பற்றிய எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்