கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறையை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு மீது த.வெ.க.வுக்கு நம்பிக்கை இல்லை என்று வாதாடப்பட்டது. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று த.வெ.க. தரப்பு வலியுறுத்தியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆதவ் அர்ஜூனா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில், "கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும்" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், "எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம். வாய்மையே வெல்லும்!" என்று உறுதியுடன் பதிவிட்டுள்ளார்.