தனிக்கட்சி இல்லை ; இதுதான் திட்டம் : தினகரன் அதிரடி பேட்டி

புதன், 17 ஜனவரி 2018 (14:58 IST)
தனிக்கட்சி தொடங்கும் திட்டமில்லை. இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதே எங்கள் முதல் நோக்கம் என எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


 
ஆர்.கே நகரில் தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு அமோகமாக வெற்றிபெற்றார். இதனையடுத்து தினகரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் தினகரன் இதனை தொடர்ந்து மறுத்து வந்தார். 
 
அந்நிலையில் புதுவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ஆம் தேதி, அதாவது நாளை தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்தும், தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் அறிவிப்பேன் என தெரிவித்தார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் ழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
இப்போது தனிக்கட்சி தொடங்கும் திட்டம் எதுவுமில்லை. அதிமுக அம்மா என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்பட விரும்புகிறோம். எனவே, அதற்கான அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடுவோம்.  தற்போதைக்கு அதுதான் எங்கள் குறிக்கோள். 
 
எம்.ஜி.ஆர் மரணமடைந்த போது இதுபோன்ற சிக்கலை ஜெயலலிதாவும் சந்தித்தார். எனவே, வேறு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன்பின் இரட்டை இலை சின்னத்தை மீட்டார். நாங்களும் அவர் வழியில் சென்று இரட்டை இலையை மீட்போம். துரோகிகளிடமிருந்து அதிமுக மீட்க நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தை நாடுவோம்” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்