அதிமுகவை கைப்பற்றும் தினகரன்; ஏப்ரலுக்குள் குடியரசுத்தலைவர் ஆட்சி!

வியாழன், 18 ஜனவரி 2018 (15:50 IST)
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவார் எனவும், தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் எனவும் டிராஃபிக் ராமசாமி கூறியுள்ளார்.
 
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பல்வேறு பொதுநல வழக்குகள் தொடர்ந்து பிரபலமானவர். இவர் மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் 5-ஆம் ஆண்டு விழா கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.
 
இதில் கலந்துகொண்டு பேசிய டிராஃபிக் ராமசாமி, தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் என்றும் கூறினார்.
 
மேலும், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன் தன்னம்பிக்கையும் தைரியமும் உடையவர். அவர் விரைவில் அதிமுகவைக் கைப்பற்றுவார் என்றார் டிராஃபிக் ராமசாமி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்