அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து போராடினால் காவிரியை மீட்கலாம்; தஞ்சையில் தினகரன் பேட்டி

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (15:10 IST)
தமிழகத்தில் அனைத்துகட்சியினரும் இணைந்து போராடினால் காவிரியை மீட்டு எடுக்கலாம் என தஞ்சை உண்ணாவிரத போராட்டத்தில் தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
தஞ்சாவூர் திலகர் திடலில் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும் தினகரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதி காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.  அந்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 
இதனால் காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்த கோரியும் டிடிவி தினகரன் இன்று தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இப்போராட்டத்தில் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 
இதுகுறித்து தஞ்சையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தினகரன், கர்நாடக தேர்தல் வரும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்றார். தமிழக மக்கள் நலன் காக்க தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து போராடினால் அபாயகரமான நிலையில் உள்ள தமிழகத்தை மீட்டெடுக்கலாம் என்றார். மேலும் காவிரியை மீட்டெடுக்கலாம் என்றார். இதுகுறித்து அனைத்து கட்சியினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்