தஞ்சாவூர் திலகர் திடலில் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும் தினகரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்த கோரியும் டிடிவி தினகரன் இன்று தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இப்போராட்டத்தில் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.