ரஜினி எந்த தொகுதில நின்னாலும் நானும் நிற்பேன்: பிரபல இயக்குனர் தடாலடி

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2018 (16:00 IST)
விரைவில் புது கட்சியை துவங்க உள்ள இயக்குனர் கவுதமன், கமல் ரஜினி ஆகியோர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவர்களை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என பேசியுள்ளார்.
 
விவசாயிகள் பிரச்சனை, காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர் இயக்குனர் கவுதமன்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த கவுதமன், பொங்கலுக்கு முன்னர் தாம் புதிய கட்சியை தொடங்கப் போவதாகவும், கட்சிப் பெயரையும் கொடியையும் விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் நடிகர் கமல், ரஜினி ஆகியோரை நடிகர்களாக தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர்கள் மீது தனி மரியாதை இருக்கிறது என்றும் கூறினார்.
 
ஆனால் அரசியலுக்கு வர நினைக்கும் அவர்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். எங்கள் மண்ணை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கமல், ரஜினி ஆகிய இருவர் எந்த தொகுதியில் நின்றாலும் அவர்களை எதிர்த்து நான் போட்டியிடுவேன். இவ்வாறு கவுதமன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்