மீசைய முறுக்குனா நீ பெரிய ஆளா? கமலை வம்பிழுத்த அமைச்சர்

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2018 (15:23 IST)
பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே பேசி வருகிறார். அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தும் வருகிறார். மேலும் செயலற்றுக் கிடக்கும் இவ்வரசை நாம் ஒன்றாய் சேர்ந்து மாற்றும்வோம் என பேசி வருகிறார்.
 
இது ஒருபுறம் இருக்க அதிமுக அமைச்சர்கள் பலர் கமலை விமர்சித்து பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் மீசைய முறுக்குனா பெரிய கட்டபொம்மன்னு நெனச்சுக்குறாறு, மக்கள் அவரை கண்டிப்பாக அரசியலில் தூக்கிலிடுவார்கள். மக்கள் பலருக்கு கமலின் கட்சிப் பெயரே தெரியாது.
 
ஆகவே அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை கமலாலும் சரி வேறு எவராலும் சரி எதுவும் செய்ய முடியாது என கமலை கடுமையாக விமர்சித்து பேசினார் அமைச்சர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்