தமிழ்நாட்டில் நான்தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறேன் என சசிகலா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாநான்தான் எதிர்க்கட்சியாக தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்றும் அதிமுக எதிர்க்கட்சி இல்லை என்றும் அவர் கூறினார்
மேலும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நான் பாஜகவுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கட்சிக்கு வரவேண்டும் என அவரது ஆசையை தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்
மேலும் நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு தலையிட கூடாது என்றும் அது நல்லது அல்ல என்றும் நீதிமன்ற உத்தரவுப்படி தீட்சதர்களிடமே நடராஜர் கோவில் இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்