ஜோதிடர் அறிவுரையால் பெயரை மாற்றுகிறாரா சசிகலா?

செவ்வாய், 7 ஜூன் 2022 (13:16 IST)
ஜோதிடர் அறிவுரையால் சசிகலா பெயரை மாற்ற இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அதிமுகவை கைப்பற்றவும் அதிமுகவில் இணையவும் தீவிர முயற்சி செய்து வருகிறார். ஆனால் அவரது முயற்சி அனைத்துமே தோல்வியில் முடிந்து வருகிறது
 
இந்த நிலையில் தொடர் தோல்வியை அடுத்து ஜோதிடரின் ஆலோசனைப்படி தனது பெயரையும் வீட்டையும் மாற்ற சசிகலா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
இருப்பினும் இந்த தகவலை சசிகலா தரப்பினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது சென்னை தி நகரில் உள்ள வீட்டில் சசிகலா குடியிருந்து வரும் நிலையில் வேறு வீட்டுக்கு ஜோதிடர் அறிவுரையின்படி மாறுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்