முதலிரவில் மனைவியை கொன்ற மாப்பிள்ளை! தானும் தூக்கிட்டு தற்கொலை!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (09:16 IST)
திருவள்ளூர் அருகே திருமணமான முதல் நாளே மனவியை கொன்று விட்டு மணமகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நீதிவாசன். இவருக்கும் சடையங்குப்பத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணிற்கும் திருமணத்திற்கு முடிவாகியுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் எளிய முறையில் வீட்டிலேயே இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. முதலிரவில் சந்தியாவுக்கும், நீதிவாசனுக்கும் இடையே தகறாரு எழுந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நீதிவாசன் தனது மனைவி சந்தியாவை கடப்பாறையால் அடித்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதுகுறித்து அறிந்த காட்டூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நீதிவாசனை தேடி வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தோப்ப்பு ஒன்றில் மரத்தில் நீதிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. அங்கு விரைந்த போலீஸார் நீதிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

திருமணமான முதல் நாளே மனைவியை கொன்று கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்