சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம்!

வியாழன், 11 ஜூன் 2020 (07:25 IST)
சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் செவிலியர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் உருவானது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு அதற்கான ஊழியம் வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில் நேற்று ஓமந்தூரார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியோடு முகக்கவசம் அணிந்த அவர்களிடம் டீன் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திக் கலைந்து போக செய்தார். குறிப்பிட்ட மருத்துமனையில் 400 கொரோனா நோயாளிகளுக்கு வெறும் 20 செவிலியர்கள் மட்டுமே உள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணில் நிற்கும் செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்கவேண்டும் என சமூகவலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்