70 வயதில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் – விபரீதமாக பலியான் இரு உயிர்கள்!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (10:44 IST)
சென்னையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் நாராயணன் (70) - மனோன்மணி (48) தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால் மனைவி மேல் சந்தேகப்பட்டு நாராயணன் அடிக்கடி அவருடன் சண்டைக்கு சென்றுள்ளார். வழக்கம்போல நேற்றும் நாராயணன் அதுபோல சந்தேகப்பட இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து மனைவியின் மேல் போட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் செய்த தவறை உணர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து தூக்கில் தொங்கியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக வீட்டில் இருந்து எந்த சத்தமும் வராதது கண்டு சென்று பார்த்த போது இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர்.  இதையடுத்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்