மனைவியின் அலுவலகத்திற்கு வந்து கத்தியால் குத்திய கணவன்...

செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:01 IST)
நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவி பணிபுரியும் அலுவலகத்திற்குச் சென்று அவரைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் மாவட்டத்திலுள்ள திருமலைப் பகுதியில் வசித்து வருபவர் சதீஸ். இவரது மனைவி ஜோஷி.

இந்தத் தம்பதியினர் கடந்த ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் ஜோஷி சமீபத்தில் தன் கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிகிறது.
இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த சதீஸ், மனைவி வேலை செய்து வரும் அலுவலகத்திற்குச் சென்று அவரைக் கத்தியால் குத்தினார்.

அங்கிருந்தவர்கள் ஜோஷியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பணியாளர்கள் சதீஷைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைத்தனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்